ஒருநாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவதுதான் இதயத்திற்கு நல்லது என சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரதச்சத்து நிறைந்த முட்டைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேசமயம் அதை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்றும் , இந்தக் கொழுப்பு இதயத்திற்கு கெட்டதாக அமைவதாக BMJ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொழுப்பு இதயத்தின் செயல்பாடுகளை பாதித்து இதய நோய்களை உண்டாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 173563 பெண்கள் மற்றும் 90,214 ஆண்களை வைத்து நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் இன்றைய நவீன உலகில் முட்டையை டையட்டில் சேர்த்துக்கொள்வதும் அதை டோஸ்ட் செய்வது, ஆம்லெட் என சாப்பிடுவதும் நவீன ஆரோக்கியத்தின் டையட்டாகப் பார்க்கப்படுகிறது. முட்டை ஆரோக்கியம்தான் என்றாலும் ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும். அதில் உள்ள மஞ்சள் கரு கொழுப்பு நிறைந்தது என்பதால் அதை ஒன்றுக்கு மேல் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறது.
எனவே காலை முட்டையை மட்டும் பிரதான உணவாக உட்கொள்ளாமல் அதோடு பழங்கள், காய்கறிகள், கெட்டி ஃபிரெஷ் தயிர், தானிய வகைகள் என சேர்த்துக்கொள்வதும் நல்லது என்கிறது.
0 Comments
No Comments Here ..