தேவையான பொருட்கள்
அரைக் கீரைத் தண்டு - ஒரு கைப்பிடி
மிளகு -10
மஞ்சள் - சிறிதளவு
செய்முறை
முதலில் அரைக் கீரையை ஆய்ந்து கீரையைத் தவிர்த்து தண்டை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
மிளகை தூளக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைக் கீரைத் தண்டை போட்டு அதில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி மிளகுத் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்ட செய்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வடிகட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
கொரோன சமயத்தில் சளி, இருமல் மற்றும் நுரையீரல் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் கசாயம்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
0 Comments
No Comments Here ..