28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

கொரொனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையினால் நான்கு கோடியே 10 இலட்சம் பேர் பாதிப்பு..

கொரொனா வைரஸ் காரணமாக 13 நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடையினால் சீனாவில் நான்கு கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொற்றை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் சீன லுனா புதுவருட கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்று தற்போது சீனாவிற்கு வெளியே ஐந்து நாடுகளில் இனம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனம், அவசர காலத்தை பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், உலகளாவிய ரீதியாக ஆபத்தை தரும் தொற்று நோயாக சர்வதேச ரீதியாக பிரகடனப்படுத்தவில்லை.

அதிக பாதிப்பை ஏற்படுத்திய வுஹான் நகரத்தில் ஆயிரம் கட்டில்களுடன்கூடிய மருத்துவமனை ஒன்றினை சீன அரசாங்கம் அவசரகால அடிப்படையில் நிர்மாணித்து வருகிறது.

இந்த புதிய மருத்துவமனை அடுத்த வாரத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கான சிகிச்சையினை ஆரம்பிக்க முடியும் என சீன அரச செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்ட 800 இற்கும் அதிகமானவர்களில் இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் சீன அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.





கொரொனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடையினால் நான்கு கோடியே 10 இலட்சம் பேர் பாதிப்பு..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு