ஜிலேபி என்பது ஜாங்கிரியின் சிறிய வடிவம் என்று பலரும் நினைப்பது உண்டு. ஆனால் ஜிலேபி சுவையில் ஜாங்கிரியை விட சற்று மாறுபட்டது. ஆம், ஜாங்கிரி உண்ண மிகவும் மிருதுவாக இருக்கும் ஆனால், ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா மாவு – 1 கப்
கார்ன் மாவு – 3 டேபிள் ஸ்பூன்
தயிர் – 3/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
புட் கலர் – சிறிதளவு
சக்கரை – 2 கப்
பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்
ஜிலேபி செய்முறை:
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன் மாவு, தயிர் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் புட் கலர் உங்களுக்கு ஜிலேபி எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்தில் புட் கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மாவினை கரைத்து வைத்துக்கொள்ளவும். கரைத்த இந்த மாவினை 8 முதல் 12 மணிநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
பிறகு ஜிலேபிக்கான சக்கரை கரைசலை தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதம் வரும் வரையில் அடுப்பில் வைத்து இறக்கவும்.
பிறகு தயாராக உள்ள மாவில் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் அதனை கரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கரைத்து வைத்துள்ள மாவினை ஜிலேபி போன்று வட்ட வடிவில் ஊற்றி அதனை நன்றாக வேகவிட்டு எடுத்து அதனை 30 நொடிகள் வரை சக்கரை பாகில் ஊறவைத்து எடுத்தால் சுவையான ஜிலேபி தயார்.
சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம் [ஜிலேபி மாவு தயாராக இருந்தால் ]
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4
0 Comments
No Comments Here ..