உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பது தான்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஊறுகாயில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம்.
இதில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது.
மேலும் அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்கச் செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.
அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம். உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
0 Comments
No Comments Here ..