05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீது உள்ள நொவா கக்கோவா அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளது

ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைகட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.


அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்கட்டை தகர்த்துள்ளனர் என உக்ரைன் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.


அழிவின் அளவு நீரின் வேகம் ஏற்படக்கூடிய வெள்ளப்பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

அணை தகர்க்கப்பட்டமை குறித்து அவசர கூட்டத்தினை கூட்டியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நொவா கக்கோவா அணை தகர்க்கப்பட்டதன் காரணமாக அடுத்தஐந்து மணித்தியாலங்களில் நீரின் அளவு ஆபத்தான மட்டத்தினை அடையும் என கேர்சன் பிராந்தியத்தி;ற்கான தலைவர் தெரிவித்துள்ளார்.


பொதுமக்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணை தகர்ப்பு குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சின் ஆலோசகரும் டெலிகிராமில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் இதற்கு ரஸ்யாவே காரணம் என தெரிவித்துள்ளார்.


ரஸ்யா ஆக்கிரமித்துள்ள நொவாகக்கோவ நகரின் தலைவர் அணை தகர்க்கப்பட்டதை ஆரம்பத்தில் நிராகரித்திருந்த அதேவேளை எறிகணை தாக்குதல் காரணமாக அணைக்கு சேதம ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்





உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீது உள்ள நொவா கக்கோவா அணைக்கட்டு தகர்க்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு