மாலைத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு நேற்றும் நேற்று முன்தினமும் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இந்த அமர்வில் மாலைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தி மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீட் கலந்து கொண்டார்.
0 Comments
No Comments Here ..