05,Apr 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது-அமெரிக்கா

இலங்கையின் சீர்திருத்தமுயற்சிகளிற்கு இந்தியாவின் முன்முயற்சியான நடவடிக்கைகள் அவசியமானவை என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.


இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும்போது முக்கியமான விடயங்களிற்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆறுமாதங்களில் நாங்கள் பல்வேறு விடயங்களில் முன்னேற்றத்தை கண்டுள்ளோம்,என தெரிவித்துள்ள திறைசேரி செயலாளர் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் நுண் பொருளாதாரத்திற்கும் ஸ்திரதன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு இன்னமும் அதிகளவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் இலங்கை போன்ற அவசர சூழ்நிலைகள் குறித்து நாங்கள் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் -இலங்கை அதிகாரிகளின் சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரவளிப்பதற்கு இந்தியா முன்முயற்சியான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது-அமெரிக்கா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு