02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

மதுக்கடைகளை மூடுவதால் எந்தப்பயனும் இல்லை- சீமான்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு 500 மதுக்கடைகளை மட்டும் மூடுவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் இதுவரை பா.ஜ.க. ஆட்சி அமையவில்லை.

 

ஆனால் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. அங்கு ஊழல் இல்லை என கூற முடியாது. ஆனால் அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அதிகாரத்துக்கு வந்த பிறகு நேர்மையாக இருப்பதுதான் சாதனை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறுவதால் எந்த கட்சிக்கும் பாதிப்பு வராது. 


வரும் காலங்களில் ஆண்ட கட்சியும், ஆளுகிற கட்சியும் பணம் கொடுக்காமல் வாக்குகள் வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. மாற்றத்தை எதிர்நோக்குபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். செந்தில் பாலாஜி மீதான விசாரணை வரவேற்கத்தக்கது. 


இருந்தாலும் இது காலம் கடந்த செயல். ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் பழிவாங்கும் செயலாகத்தான் இதனை பார்க்க முடிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் எங்கே சென்றார்கள்? செந்தில் பாலாஜியின் விஷயத்தில் அவரை காக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்கிறாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். மொத்தத்தில், இது அனைவரையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகத்தான் தெரிகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.





மதுக்கடைகளை மூடுவதால் எந்தப்பயனும் இல்லை- சீமான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு