06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதி- கோவில் நிறுவாகம்

பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 


மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் படிப்பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக் கூடாது, கோவில் வளாகத்தில் டிரம்செட் அடிக்க கூடாது, கைலி அணிந்து வர கூடாது போன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுமதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரெயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர்.

 

அவர்களை கோவில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதற்கு இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது





பழனி முருகன் கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதி- கோவில் நிறுவாகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு