ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைக் குறிக்கும் 50 பவுண்ட் நினைவு நாணயத்தை நிதி அமைச்சர் சஜித் ஜாவிட் வெளியிட்டார்.
குறித்த நாணயம் “அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து நாடுகளுடனான நட்பு” என்ற பொறிப்பையும் ஜனவரி 31 திகதியையும் தாங்கி நிற்கின்றன.
அத்தோடு குறித்த நாணயங்களை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு அதாவது எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னரே அச்சிடுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சுமார் மூன்று மில்லியன் பிரெக்ஸிட் நாணயங்கள் நாடுமுழுவதும் புழக்கத்தில் இருக்கும் என்றும் மேலும் ஏழு மில்லியன்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் சேர்க்கப்படும் என்றும் நிதி அமைச்சர் சஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
குறித்த நாணயம் ஒன்றினை இந்த வாரம் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் சஜித் ஜாவிட் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..