உக்ரைன் ரஷ்யப் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபரை மீட்டுவர பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், அதிக ஆபத்து மிகுந்த குறித்த நடவடிக்கை தொடர்பில் 70 பிரித்தானிய வீரர்களும் 150 அமெரிக்க வீரர்களும் இரவு நேர இரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லிதுவேனியா நாட்டில் குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது. இவர்களுடன் உக்ரேனிய சிறப்பு படை வீரர்களும் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், சொந்த நாட்டையும் மக்களையும் விட்டு இக்கட்டான வேளையில் தாம் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்து வருவதாகவும், போருக்கான ஆயுதங்களும் உதவியும் போதும் என அமெரிக்காவிடம் முறையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜெலென்ஸ்கி மீது குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகள் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாகவே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்
0 Comments
No Comments Here ..