நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக நேட்டோவிற்கும் மொஸ்கோவிற்கும் இடையில் சாத்தியமான "மோதல்கள்" ஏற்படுவது தொடர்பில்"ஏற்றுக்கொள்ள முடியாத" கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் கூறியுள்ளார்.
உக்ரைய்ன் மீதான தாக்குதலை ரஷ்யாவை நிறுத்தாவிட்டால், ஏனைய நாடுகளும் அச்சுறுத்தப்படலாம் எனவும் அது நேட்டோவுடன் மோதலில் முடிவடையும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமது நாட்டின் அணு ஆயுதப் படையை எச்சரிக்கை நிலையில் வைத்திருப்பதற்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் கருத்துக்களே காரணம் என ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் திமித்ரி பஸ்கோவ் தெரிவித்த கருத்தை பிரித்தானியா நிராகரித்துள்ளார்.
வன்மம்மிக்க வார்த்தைப் பிரயோகத்தையோ மோதலை தீவிரப்படுத்தும் கருத்துக்களையோ பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வெளியிடவில்லை என பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் கூறியுள்ளது.
0 Comments
No Comments Here ..