உத்தர பிரதேச மாநிலத்தில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அவனது மர்ம உறுப்பின் தோலை தவறுதலாக மருத்தவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பெரேலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.
ஆனால், மருத்துவர்கள் கவனக்குறைவாக அவது மர்ம உறுப்பினர் தோல் பகுதியை (Circumcision) நீக்கினர். இதனால் அந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தி மெல்லமெல்ல வெளியே கசிந்தது. இதுகுறித்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ததால் செய்தி காட்டுத்தீயாக பரவியது. இந்த சம்பவம் சுகாதாரத்துறையை கையில் வைத்திருக்கும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக்கிற்கும் எட்டியது. அவர் உடனடியாக பெரேலி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பல்பீர் சிங்கை தொடர்பு கொண்டு, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
உடனடியாக டாக்டர் பல்பீர் சிங் தலைமையிலான குழு மருத்துவமனை சென்று விசாரணை நடத்தியது. அங்கு பணிபுரியும் ஸ்டாஃப்களிடமும் விசாரணை நடத்தியது. அந்த சிறுவனின் உறவினர்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், மருத்துவமனையின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்
0 Comments
No Comments Here ..