24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது குறித்த வழக்கை பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


2010 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றிய விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவை வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு