பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்று போராளிகளை காட்டிக்கொடுக்கும் செயற்பாடில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கோரக்கோவில், உதயபுரம் பிரதேசத்தில் நேற்று (26) சமூக சேவகர் வெ. மோகன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன், முஸ்லிம் அரசியல்வாதிகள் கருணா அம்மான் என்றால் நட்பாகத் தான் இருக்கின்றனர். சாதாரண மக்கள் நான் சண்டைக்கு வருவதாக நினைக்கின்றனர். அலிசாஹிர் மௌலானா என் உயிர் நண்பர் அரசியல் கொள்கை வேறு நட்பு வேறு. இதுதான் நாகரீக அரசியல்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் குரோத அரசியலை வளர்க்கின்றனர். கோடீஸ்வரன் அண்மையில் விட்ட அறிக்கை பாரதூரமான ஒரு அறிக்கை பழைய போராளிகள் அனைவரையும் கருணா அம்மான் திரட்டுகிறார் என்றால் அது பாரதூரமான செயற்பாடு.
அது காட்டிக்கொடுக்கும் அரசியல். அதற்கு நான் விடுவேனா படைத் தளபதியாக இருந்த நான் வெளியில் இருக்கும் போதும் போராளிகளை உள்ளே வைக்க நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போராளிகளை கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்றால் என்னை தானே முதலில் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். நான் துணிந்து வெளியில் நிற்கின்றேன் என்றால் ஏனைய போராளிகளே உள்ளே வைக்க அனுமதிப்பேனா? அது ஒரு காலமும் போராளிகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு சென்று வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்களை அனுப்புவதால் பொதுமக்களுக்கு என்ன பயன் அவர்கள் அங்கு சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதால் எமது மக்களுக்கு நன்மை வருமா? நாங்களும் கதைக்கலாம் அதை அடித்து பிடிக்கலாம் இது தகர்த்து பிடிக்கலாம் என்று பேசிக் கொள்ளலாம் இதில் எமது மக்களுக்கு என்ன இலாபம் என்று இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது.
நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நமக்கு யதார்த்த ரீதியாக பொருந்தக்கூடிய அரசியலை செய்யக்கூடிய தலைமைகள் தான் எமக்கு வேண்டும். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரை பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றை நான் தீர்த்து வருகின்றேன்.
கடந்த காலங்களில் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க கூடிய வாய்ப்புகள் பல கிடைத்தன ஆனால் அவற்றை தவறவிட்டு விட்டோம். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு சார்பாக எமது பக்கம் தாவி வந்தது கேட்டனர். அவர்களின் தகைமை இல்லாமையினால் அந்தப் பதவிகள் கிடைக்கவில்லை அவர்களின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
எமது மக்களுக்கு அபிவிருத்திகள் வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் அது அரசியல் சாணக்கியத்தினால் மாத்திரமே முடியும் அது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு செய்ய முடியாது . நாம் யுத்தம் வேண்டாம், வன்முறை வேண்டாம் என்று வந்திருக்கின்றோம் எமக்கிருக்கும் ஒரே பலம் அரசியல் பலம். நாம் சரியாக திட்டமிட்டு சரியாகச் ஏற்படாவிட்டால் அரசியல்வாதிகளை வளர்த்துவிடுவோமே தவிர தமது பிரச்சினைகள் தீர்க்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாது. அவ்வாறான அரசியல்வாதிகள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார்கள்.
தமிழ் தேசிய உணர்வால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மையாக உணர்வு இருக்கிறதா? இவர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்று தெரியுமா? யுத்தத்தின் வடுக்கள் தெரியுமா? யுத்தத்தினால் பிள்ளைகளை இழந்த தாய்களின் வலிகள் தெரியுமா? மாவீரர் குடும்பங்கள் படும் அல்லல்கள் புரியுமா? அவர்களுக்கு தெரியாது.
இப்போது இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே புரியாது. இவர்கள் தற்போதும் தங்களை தமிழ் தேசிய உணர்வாளர்கள் போல் சித்தரித்துக் கொண்டு திரிகின்றனர். இவர்களை நாங்கள் விரட்டியடிக்க வேண்டும்.
இன முரண்பாடு வேண்டாம் என்று தான் யுத்தத்தை கைவிட்டு அரசியல் பாதையில் பயணிக்கும் நான் இன குரோதங்களை வளர்ப்பவன் நானில்லை. ஆனால் ஒரு தேசிய இனத்தின் மக்களை நசுக்கும் செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதை தடுத்து நிறுத்துவேன். ஒரு தனிப்பட்ட நபர்கள் காணி அபகரிப்பு நில அபகரிப்பு போன்ற விடயங்களில் ஈடுபட்டால் அது ஒரு சமூகத்தின் செயற்பாடாக நாம் கருதக்கூடாது. அவருக்கான சட்ட நடவடிக்கைகள் மூலம் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். எமது தமிழ் முதலாளிமாரும் காணி அபகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு எத்தனை ஏக்கர் காணி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது. அதேபோன்று தான் முஸ்லீம்கள் சிலரும் அரசியல் பலத்தை பயன்படுத்தி காணிகளை கையகப்படுத்த முயல்கின்றனர். இவற்றிக்கான திட்டங்களைப் பெற சட்டரீதியாக செல்வோம் வன்முறை ஒருகாலும் தீர்வாகாது.
முஸ்லிம்கள் சரியாக வாக்களித்து தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர் அவர்கள் ஆளும் அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை செய்கின்றனர். காரணம் அரசியல் பலம் தேசியம் தேசியம் என்று தேய்ந்து போய்விட்டோம் . இப்போது இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.
அன்ரன் பாலசிங்கம் தலைமையில் தமிழ் மக்களுக்காக உலகம் முழுதும் பேச்சுவார்த்தைக்கு சென்று உயிரோடு இருக்கும் ஒரே ஒரு நபர் நான் மாத்திரம் தான். இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர்களுக்கு தேசியம் கதைக்கவும் அருகதை இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார் போராளிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்று கூறுகின்றார். அவ்வாறு போராட்டம் நடத்துவதற்கு அவரையும் வந்து கலந்து கொள்ளுங்கள் கேட்கிறோம். அவர் போராட்ட காலத்தில் ஓடி ஒழித்தவர். நாங்கள் போராளிகளை ஒன்று சேர்த்துள்ளதால் பயந்து போய் உள்ளார். போராளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
முன்னாள் போராளிகள் எத்தனை ஆயிரம் பேர் அந்த விதமாக அங்கவீனர்கள் இருக்கின்றன வடக்கு - கிழக்கு தேசங்கள் இன்று சின்னாபின்னமாக கிடக்கின்றது. இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூலம் ஒரு நல்ல காலம் பிறந்திருக்கிறது.
விடுதலைப் புலிகளில் இருந்த பழைய போராளிகள் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம் என்று ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருக்கும் போது தான் போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு 12 ஆயிரம் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதை நான் தான் முன் நின்று செய்தேன். களத்தில் நின்று போராடிய போராளிகளின் வலிகள் எனக்கு தான் புரியும் அந்த வலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புரியாது.
அம்பாறை மாவட்டத்தில் குடிநீர் இல்லாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் இருக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்னிடம் கேளுங்கள் அம்பாறை மாவட்டத்தில் தேசிய குடிநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தமிழ் பொறியியலாளர் யாராவது இருக்கிறார்களா? என்று கேளுங்கள் அவருக்கு அது எல்லாம் தெரியாது சும்மா கூவிக்கொண்டு திரிவது தான் அவருடைய வேலை. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தமிழர் ஒருவரை பொறியியலாளராக நியமித்து கொடுப்பேன் அப்போது அந்த மக்களின் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார்.
மாவட்டத்தில் காணப்படும் மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி அதை விடுத்து அரைக்காற் சட்டை அணிந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஸ்கேற் கொடுப்பதில்லை.
கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கொடுத்தால் நாங்கள் அனைவரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து நிற்போம் என்று கூறுகின்றனர். அம்பாரை மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கு இது மாத்திரம் பிரச்சினை இல்லை. இது போன்ற ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும். இதில் முஸ்லிம்களுக்கு எந்தவித இழப்புகளும் இல்லை. கல்முனை என்று பார்க்காமல் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற ரீதியில் அவர்கள் பார்க்க வேண்டும்.
இதனை தொடர்ந்து முஸ்லிம்களினால் அபகரிக்கபடும் மயான காணியை பார்வையிட்ட கருணா அம்மான் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருடன் தொடர்புகொண்டு விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கினார்.
0 Comments
No Comments Here ..