28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

இனிமேல் எப்போதும் கறுப்புதான் டுவிட்டர் -எலான்மஸ்க்

டுவிட்டர் தளத்தில் மாற்றங்கள் செய்வதை எலான் மஸ்க் தற்போதைக்கு நிறுத்த மாட்டார் என்றே தெரிகிறது. தற்போது X என்று மாறி இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என்பது தான்.

டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து தளத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய அம்சம் பற்றிய தகவலை, டுவிட்டர் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் முதல் ஆப்ஷன், வழக்கமான வெள்ளை நிற பேக்கிரவுன்டை வழங்குகிறது. டிம் ஆப்ஷன் டுவிட்டர் தளத்தை சுற்றி இருள் சூழ்ந்ததை போன்று காட்சியளிக்கும் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது. லைட்ஸ் அவுட் ஆப்ஷனில் திரை முழுக்க கருப்பு நிற பேக்கிரவுன்ட் வழங்கப்படுகிறது.

 புதிய மாற்றம் அமலுக்கு வரும் வரையில், இந்த மூன்று ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படும். டுவிட்டர் தளத்தில் எழுத்துக்களின் அளவை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி எழுத்துக்களை எல்லோ, பின்க், பர்பில், ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டார்க் மோட் மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.




இனிமேல் எப்போதும் கறுப்புதான் டுவிட்டர் -எலான்மஸ்க்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு