28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

ஹவாயின் மெளய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.

அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்து வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ  பரவிவருகிறது .

தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காட்டுத் தீயில் 6 பேர் உயிரிழந்து இருப்பது உறுதியாகியுள்ளது



மேலும் 20 பேர் வரை கடுமையான தீ காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதிகப்படியான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.





ஹவாயின் மெளய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு