28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

ஹவாயில் கடும்காட்டுதீ காரணமாக 50 க்கு, மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மவுய் தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. படிப்படியாக இந்த தீ நகர் புற பகுதிகளுக்கு பரவியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ஹவாயில் கடும்காட்டுதீ காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநில ஆளுநர் இதனை இதயத்தை வருத்தும் தினம் என வர்ணித்துள்ளார்.

ஹவாயின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாகயிருக்கவேண்டும் என மாநில ஆளுநர் ஜொஸ் கிறீன் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் 1960 சுனாமியை விட அதிகமாகலாம் என அவர்தெரிவித்துள்ளார்.


இன்று நாங்கள்சந்தித்தது ஒரு பேரழிவு என அவர் தெரிவித்துள்ளார்.எங்கள் மாநிலத்தை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு கூட்டு முயற்சிகள்அவசியம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பலநூறு வீடுகள் அழிவடைந்துள்ளன ஆயிரக்கணக்கானவர்களிற்கு தற்காலிக தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





ஹவாயில் கடும்காட்டுதீ காரணமாக 50 க்கு, மேற்பட்டோர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு