ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இருப்பதற்கு அடிபோஸ் என்னும் திசுக்கள் தான் அடிப்படை காரணமாக இருக்கின்றன. அந்த அடிபோஸ் திசுக்களில் அதிகமாக கொழுப்பு படிதல் ஏற்படும்போது உண்டாகும் நிலையை தான் கைனகோமாஸ்டியா (gynecomastia) என்று அழைக்கிறாகள்.
கைனகோமாஸ்டியா (gynecomastia) என்பது ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக (வீங்கிய) இருக்கும் நிலை. இது மிகப்பெரிய ஆபத்தான விஷயம் இல்லையென்றால் நிறைய அசளகரியங்களை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இந்த பிரச்சினையால் நிறைய ஆண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆட்படுகிறார். சில உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் அதன் கட்டமைப்பில் மாறுதல்களை ஏற்படுத்த முடியும். ஆனால் அறுவை சிகிச்சை தான் அதற்கான நிறந்தர தீர்வாக அமையும்.
ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக ஆவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முதன்மையானவைாக கீழ்வரும் காரணங்கள் இருக்கின்றன.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,
உடல் பருமன்,
மரபணு,
சில மருத்துவ காரணங்கள்,
வயதாகும் போது,
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,
ஆகியவை பெரிய மார்பகங்கள் உண்டாகக் காரணமாக அமைகின்றன.
ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக இருப்பதால் சில ஆரோக்கியப பிரச்சினைகளும் உண்டாகின்றன. குறிப்பாக பெரிய மார்பகங்கள் உள்ள ஆண்களுக்கு கீழ்வரும் பிரச்சினைகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கார்டியோ வாஸ்குலர் நோய் ஆபத்துகள் அதிகரிக்கலாம்.
உடல் வடிவமைப்பால் ஏற்படும் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைபாடு ஆகியவை உண்டாகலாம்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வும் அவை சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகலாம்.
மார்பகப் பகுதியில் கொழுப்புகள் சேருவதைத் தடுக்க வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது முக்கியம்.
சமச்சீர் உணவு முறை (balanced diet) பின்பற்ற வேண்டும்.
முறையான தினசரி உடற்பயிற்சிகளை செய்வது அவசியம்,
உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்,
போதிய அளவு தூக்கம் அவசியம்,
உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உடலை டீடாக்ஸ் செய்வது அவசியம்.
பெரிய மார்பகங்கள் ஆண்களுக்கு இருப்பது குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் இருக்கின்றன. இதை புரிந்து கொண்டாலே எளிதாக இந்த பிரச்சினையை அணுக முடியும்.
பெரிய மார்பகங்கள் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு மட்டும் வரும்,
சிகிச்சையின் மூலம் ஒரே முறையில் அந்த பகுதியில் உள்ள கொழுப்பை நீக்கி விட முடியும். (திடீரென ஒரே முறையி்ல் எந்தவொரு பகுதியில் உள்ள கொழுப்பையும் நீக்கிவிட முடியாது),
உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே பெரிய மார்பகங்களை சரிசெய்து விட முடியும்.
மார்பகங்கள் படியும் கொழுப்புகள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான் என்று நினைப்பது (ஆனால் அதன் வகைகளும் காரணங்களும் வேறு),
அறுவை சிகிச்சை மட்டுமே பெரிய மார்பகங்களைக் குறைப்பதற்கான தீர்வு என்று நினைப்பதும் முற்றிலும் தவறானது.
0 Comments
No Comments Here ..