28,Jan 2025 (Tue)
  
CH
வாழ்வியல்

ஆரோக்கியமான உறவில் எல்லைகள் வகுப்பது எந்தளவிற்கு முக்கியமானது?


உங்கள் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆரோக்கியமான உறவுமுறை மிகவும் முக்கியமாகும். உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் துணைவரோடு நீண்ட நாட்கள் வாழும் போது, உங்கள் உடலில் கார்டிஸாலின் (மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்) அளவு குறைகிறதாம். அதுமட்டுமின்றி, உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருப்பதற்கும் நீண்ட ஆயுளுக்கும் இது உதவுகிறதாம்.

எந்தவொரு ஆரோக்கியமான உறவு முறையிலும் எல்லைகளை வகுத்துக்கொள்வது மிகவும் முக்கியமான அம்சமாகும். உங்களின் தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள உங்கள் துணைவருக்கு ஒரு வழிகாட்டியாக இது விளங்கும்.

உறவில் எல்லைகள் தெளிவாக வகுக்கப்படும் போது இருவருமே பெரிதும் பயனடைகிறார்கள். இப்படி ஆரோக்கியமான உறவுக்கு தேவையான பல டிப்ஸ்களை தருகிறார் Wholistic Wellbeing செயலியின் உலகளாவிய தலைவர் பிரகிரிதி போடர்.

உங்கள் துணைவரோடு ஆரோக்கியமான உறவுமுறையை பேண வேண்டுமென்றால், முதலில் உங்கள் மீது நீங்கள் உண்மையான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் நேரத்திற்கும் காலத்திற்கும் மதிப்பளியுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை முதலில் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அதேப்போல் உங்கள் மனநலனில் எதிர்மறையாக தாக்கம் செலுத்தக்கூடிய விஷயத்திற்கு “வேண்டாம், முடியாது” என சொல்ல ஒருபோதும் தயங்காதீர்கள். உடற்பயிற்சி செய்வது, ஓய்வெடுப்பது, அரோக்கியமான உணவுகளை


சாப்பிடுவது, நன்றாக தூங்குவது என முதலில் உங்கள் மீது அக்கறை காட்டுங்கள். அப்போதுதான் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உங்கள் உறவில் அக்கறை செலுத்த தயாராவீர்கள்.

எப்போதும் உங்கள் துணைவரிடமிருந்து மரியாதையை எதிர்பாருங்கள். எல்லா உறவிலும் சண்டைகளும் சச்சரவுகளும் வரவே செய்யும். ஆனால் மரியாதை குறைவாக நடந்துகொள்வதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

 

என்னால் முடியாது” என்ற வார்த்தையை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல ஏன் இவ்வுளவு தயங்குகிறீர்கள். இப்படிச் சொல்வதால் நம்முடைய உறவு முறிந்து போய்விடுமோ என்றெல்லாம் வீணாக பயப்படாதீர்கள். பலரும் அப்படியொரு வார்த்தை இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். ஒன்றை மட்டும் எப்போதும் நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் ஒருவரோடு நெருக்கமான உறவில் இருந்தாலும், நமக்கென நியாயமான எல்லைகள் தேவைப்படுகிறது. அகவே எது உங்களுக்கு தேவை, தேவையில்லை என்பதை வெளிப்படையாக கூறிவிடுங்கள்.

உங்கள் துணைவர் செய்த தவறுகள் அல்லது குற்றத்திற்கெல்லாம், “நான்தான் காரணம்”, “என்னால்தான் இப்படி நடந்தது” என்று குற்றவுணர்ச்சி கொள்வதை முதலில் கைவிடுங்கள். நீங்கள் தான் தவறு செய்துள்ளீர்கள் என உங்கள் துணைவருக்கு புரிய வைக்க உதவுங்கள். அவர்கள் கோபமாகவோ, சோகமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ இருந்தால், அவர்களின் உணர்வுகளை திசை மாற்றுங்கள்.

உறவுமுறைக்கு வெளியேயும் உங்கள் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள். இருவரும் சேர்ந்திருக்கிறோம் என்பதற்காக உங்கள் சுதந்திரத்தை, தனித்தன்மையை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா. உங்களுக்கென தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்கள் இருக்கலாம். அதை நிறைவேற்ற முயற்சியெடுங்கள். தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ சுற்றுலா செல்லுங்கள். ஆரோக்கியமான உறவுமுறையில் இருந்து கொண்டே உங்களால் சுயமாக முடிவெடுக்க முடியும்.

ஆகையால், அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு முன், எது நமக்கு சரிபட்டு வரும் என்பதை உங்களிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே உங்களின் எதிர்பார்ப்புகளை தெளிபடுத்திவிடுங்கள். இன்னொன்றையும் மறந்துவிடாதீர்கள். இந்த எல்லைகள் உங்கள் இருவருக்குமிடையே ஆரோக்கியமான, நெருக்கமான, நீடித்த உறவுமுறையை வளர்க்குமே தவிர உங்கள் இருவரின் பிரிதலுக்கும் காரணமாக நிச்சியம் இருக்காது.




ஆரோக்கியமான உறவில் எல்லைகள் வகுப்பது எந்தளவிற்கு முக்கியமானது?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு