ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் 4 போட்டியும் இலங்கையில் 9 போட்டிகளும் விளையாடப்படுகின்றன.
நேற்று முந்தினம் தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் மேட்ச்சியில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2 ஆட்டமாக இலங்கை மற்றும் வங்கதேசம் இடையே போட்டி நடத்தப்பட்டது.
இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி இலங்கையின் பல்லிகெலே சர்வதேச மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்ட வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 164 ரன்களை எடுத்தது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இலங்கை அணி வீரர்கள் விளையாடத் தொடங்கினர். 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது சதீரா சமரவீரா மற்றும சரித் அசலங்கா ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்
சதீரா 54 ரன்களும், அசலங்கா 62 ரன்களும் சேர்த்தார்கள். 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது.













0 Comments
No Comments Here ..