09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

தம்பதிகள் செக்ஸ் வாழ்க்கையில் இந்த மூன்றையும் பின்பற்றினால்..

எந்தவிதமான பந்தம் என்றாலும் அங்கு உரையாடல் மிக மிக அவசியமாகும். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள, கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அல்லது நம்முடைய கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த உரையாடல் உதவியாக அமைகிறது.

ஆனால் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான பாலியல் ரீதியிலான பந்தம் என்று வருகிறபோது பேசுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இது குறித்து வெளிப்படையாகவும், நேர்மையாகவும் கலந்தாலோசனை செய்யும்போது ஆண் பெண் இடையிலான பந்தம் வலுப்படுகிறது.

ஏதோ பாலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த உரையாடல் பயன்படும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அது தவறானதாகும். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பாச பிணைப்பை ஏற்படுத்தவும் இது உதவியாக அமையும்

உங்கள் வாழ்க்கை துணையுடன் நெருக்கமாக பேசுவதற்கு உங்களுக்கு தயக்கமாகவும், அச்சமாகவும் இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி வெளிப்படையாக பேசும் போது இருவருக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரிக்கும்.


பாலியல் உறவு கொள்ளும் போது இருவரில் யாருக்கேனும் வலி அல்லது எரிச்சல் அல்லது மிகுந்த அசௌகரியம் ஏற்பட்டது என்றால் அது குறித்து உங்கள் வாழ்க்கை துணையிடம் தெரிவிக்க வேண்டும். எதுவுமே பேசாமல் நீங்கள் ஒருவராக அதை கடந்து செல்ல நினைத்தால், அதன் விளைவாக குழப்பங்களும், பிரச்சினைகளும் ஏற்படலாம். அதேபோல தம்பதியரில் யாரோ ஒருவருக்கு பாலியல் ரீதியான தொற்று நோய்கள் ஏற்பட்டிருந்தால் அது குறித்தும் வாழ்க்கை துணைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நீங்கள் வாயைத் திறந்து பேசாமல் உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கை துணைக்கு தாமாகவே புரிந்து விடும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறானதாகும். வாயைத் திறந்து பேசாமல் எதுவும் புரிய வைக்க இயலாது. அதே சமயம் உங்கள் வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்புகள் குறித்தும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் பந்தத்தை பலப்படுத்துவதற்கு ஊக்கமாக அமையும்.

 

உங்கள் வாழ்க்கை துணையின் ஆர்வத்தை நீங்கள் மட்டுப்படுத்தக் கூடாது மற்றும் அவர்களது உடல் அமைப்பு, அழகு குறித்து கேலி செய்யக் கூடாது.

உங்கள் வாழ்க்கை துணை அவரது குறைகளை உங்களிடம் எடுத்துரைக்கும் போது அதை மறுத்து பேசக்கூடாது. அதற்கு பதிலாக பொறுமையாக கேட்டு அதற்கு தீர்வு காண முற்பட வேண்டும்.

எப்போதும் எதிர்மறையான விஷயங்களை சுட்டிக்காட்டி குறை சொல்வதைக் காட்டிலும், அவர்களிடம் உள்ள சாதகமான அம்சங்களை பாராட்டி பேச கற்றுக் கொள்ளுங்கள்

 




தம்பதிகள் செக்ஸ் வாழ்க்கையில் இந்த மூன்றையும் பின்பற்றினால்..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு