29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

தமிழில் பெயர் பலகை இல்லையெனில் ரூ.2000 அபராதம்

வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றில் தூய தமிழில் தான் பெயர் பலகை இருக்க வேண்டும் என தமிழக அரசு 1980களிலும், 90களிலும் உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அன்றைய காலக்கட்டங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகைகள் மாற்றப்பட்டன. உதாரணத்திற்கு டீ கடை என்பது தேநீர் கடை என்றும், ஹோட்டல் என்பது உணவகம் எனவும் மாற்றப்பட்டன.

மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்க விரும்பினால் அது தமிழ் பெயருக்கு அடுத்ததாக இடம்பெற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இதையும் வணிகர்கள் கடைப்பிடித்து வந்தனர்.

இதனிடையே, ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நடைமுறையை பல வணிக நிறுவன உரிமையாளர்களும், கடைக்காரர்களும் அலட்சியம் செய்ய தொடங்கினர். இதனால் தற்போது பல கடைகளில் பெயர் தமிழில் இல்லாமல் இருப்பதை பார்த்திருப்போம். இந்நிலையில், தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

இதனிடையே, ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நடைமுறையை பல வணிக நிறுவன உரிமையாளர்களும், கடைக்காரர்களும் அலட்சியம் செய்ய தொடங்கினர். இதனால் தற்போது பல கடைகளில் பெயர் தமிழில் இல்லாமல் இருப்பதை பார்த்திருப்போம். இந்நிலையில், தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.

தமிழில் பெயர் பலகை இல்லையெனில் ரூ.2000 அபராதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு