28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

கனடாவுக்கு நன்றி தெரிவித்த உக்ரையின் ஜனாதிபதி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும்.

ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான். நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கி ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் வரவேற்றார்.

அதன்பின், அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவரை அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்நிலையில், பாராளுமன்றத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும்.

ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான். நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்றார்.

கனடாவுக்கு நன்றி தெரிவித்த உக்ரையின் ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு