அமெரிக்க கடற்படையினரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள முகாமில் இருந்து கலிபோர்னியாவுக்கு பறந்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஹெலிகொப்டர் காணாமல் போகும் போது அதில் ஐந்து கடற்படையினர் பயணித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
CH-53E Super Stallion ரக ஹெலிகொப்டரே காணாமல் போயுள்ளது. ஹெலிகொப்டரைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..