மினுவாங்கொடை - யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர், வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இன்று (11) அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய கொள்ளைக் குழுவொன்று குறித்த வீட்டிற்குள் கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கொள்ளையர்களில் ஒருவரை வீட்டில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..