04,Feb 2025 (Tue)
  
CH
BREAKINGNEWS

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி!

பல வருட காதலை தவிர்க்க முயன்ற 22 வயது காதலனை கத்தியால் குத்திய 19 வயது காதலியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலதா உத்தரவிட்டார். கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கம்பளை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

சிறிது காலத்திற்கு பின்னர் குறித்த இளைஞன் தன்னை கைவிடுவதாக உணர்ந்தர் அவர், இதுபற்றி காதலனிடம் கேட்டாலும், அவனது முடிவு மாறாது என்பதை அறிந்து, அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அந்த யுவதி.


இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், முகநூலில் இருந்து புகைப்படங்களை அகற்றுமாறு கூறி, அவரை தாக்கியுள்ளார், இதனை அறிந்த அவரது தாயும் சகோதரரும் சம்பவத்தில் தலையிட்டுள்ளனர்.


அதன்படி, குறித்த இளைஞன் வியாபாரம் செய்யும் கம்பளை பொதுச் சந்தைக்கு யுவதியின் தாயும் சகோதரனும் சென்று இது குறித்து கேட்டபோது, ​​குறித்த இளைஞன் காதலியின் சகோதரனை தாக்கியுள்ளார். அங்கு தாக்கப்பட்ட மகனை மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றுள்ள நிலையில், அந்த யுவதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.


இதில் படுகாயமடைந்த காதலன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலின் பின்னர் அங்கிருந்த ஏனையவர்கள் யுவதியை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.





காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு