வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.













0 Comments
No Comments Here ..