15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

72ஆவது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வு இதுவாகும்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கு, சுதந்திர சதுக்க வளாகத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் வெளிநாட்டு இராஜதாந்திரகள் உட்பட 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.

இதேநேரம், பொதுமக்கள் ஆயிரம் பேரளவில் இந்த நிகழ்வை பார்வையிடவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் இடம்பெறும் அணிவகுப்பு மரியாதையில் 3 ஆயிரத்து 376 இராணுவத்தினரும், 799 கடற்படையினரும், 847 வான்படையினரும், 596 காவற்துறையினரும் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பனவற்றில் தேசிய கொடிகளை ஏற்றுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டல்வல்கள் அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை தயார் படுத்தப்படும் நிறுவனங்கள் முதலானவை இன்றைய தினம் மூடப்படவுள்ளன.

அதேநேரம், அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடிவிடுமாறு அரச நிர்வாகம் உள்நாட்ட அலுவல்கள் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவித்திருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 




72ஆவது சுதந்திர தினம் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு