கனடா - ஒட்டோவாவில் மனைவியை குத்திக்கொன்று விட்டு, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனது தாய்க்கு வீடியோ அழைப்பை மேற்கொண்ட நபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த ஜக்ப்ரீத் சிங் - பல்வீந்தர் கவுர் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக குடும்பத்துடன் இருவரும் கனடா சென்றனர்.
இந்நிலையில் வேலையை விட்டு நின்ற கோபத்திலும் பணப்பிரச்னை தொடர்பாகவும் கணவருடன் மனைவி சண்டையிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்திவிட்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள தனது தாய்க்கு வீடியோ அழைப்பை மேற்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அப்போது ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மனைவி, கவுர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ஜக்ப்ரீத் சிங்கை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் தனது சகோதரியை சரமாரியாக கத்தியால் குத்தியபின் தாய்க்கு வீடியோ அழைப்பை மேற்கொண்டு நிரந்தரமாக அவளை உறக்கத்தில் தள்ளிவிட்டேன் என ஜக்ப்ரீத் கூறியதாக, பல்வீந்தரின் சகோதரி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாகவே எப்போதும் இருந்ததாக ஜக்ப்ரீத் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..