கொட்டாவ, ஹைலெவல் வீதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் உயர்தரத்திற்கு தோற்றிய சஹான் திவந்த பெரேரா என்ற மாணவனே இந்த துரதிஷ்டமான சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். குடும்பத்தில் இளையவரான சஹான், நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று தனது தாயாரிடம் காட்டிய பின் மீண்டும் திரும்பி வந்த போது இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மீது அதிக ஆசை கொண்ட சஹான், அதை தனது தாயிடம் காட்டுவதற்காக அப்படி எடுத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கிச் சென்ற வேன் ஒன்று வீதியின் குறுக்கே (யு-டர்ன்) வலதுபுறம் திரும்ப முற்பட்டபோது, மாகும்புரவிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற சஹான் வேனில் மோதியுள்ளார். மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொட்டாவையில் இருந்து மாகும்புர நோக்கி பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் சஹான் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். விபத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் கெப் வண்டியின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..