களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்வத்தில் 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..