08,May 2024 (Wed)
  
CH
ஆரோக்கியம்

உலக புற்றுநோய் தினம்


பிப்ரவரி 4-ம் தேதியான இன்று உலக புற்றுநோய் தினமாக அணுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்து தொடர் விழிப்புணர்வுகளை உலக சுகாதார மையம் ஏற்படுத்தி வருகிறது.


சர்வதேச புற்றுநோய் தடுப்பு கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் 10-ல் ஒரு இந்தியருக்கு தங்களது வாழ்நாளில் புற்றுநோய் பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 15-ல் ஒருவர் இந்த நோயின் வீரியத்தால் மரணமடையும் சூழலும் உள்ளது.


இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1.16 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் ஆண்டுக்கு 7,84,800 பேர் மரணமடைகின்றனர். ஆய்வின் அடிப்படையில் பாதிக்கப்புக்கு உள்ளாகும் 5.70 லட்சம் ஆண்களுள் அதிகப்படியானோர் வாய்ப்புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதுக்கப்படுகின்றனர்.


புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுள் மார்பகப் புற்றுநோய், கர்பப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய் ஆகிய பிரச்சனைகளாலே 60 சதவிகிதம் பேர் உள்ளனர். ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 1,62,500 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனராம்


இதேவேளை புற்றுநோய் மருத்துவத்தில் வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன


மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்டாகும் புற்றுநோயை குணப்படுத்தும் முறை ஒன்றை கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


இந்த முறை இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சோதிக்கப்படவில்லை என்றாலும், இது புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் மிக்கது என்று 'நேச்சர் இம்யூனாலஜி' எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இதன் முடிவுகள் கூறுகின்றன.


புதிய கண்டுபிடிப்பினாது


உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களைத் தாக்கும்.


மனித உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து, அவ்வாறு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் அவற்றைத் தாக்கி அழிக்கும் உயிரணுக்கள் டி-உயிரணுக்கள் (T-Cells) எனப்படும்.


அனைத்து வகையான புற்று நோய்களையும் கண்டறிந்து அழிக்கும் ஒரு வகை டி-உயிரணுவைத்தான் இப்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


"இது சாத்தியம் என்று யாரும் இதுவரை நினைக்கவில்லை. ஒரே வகையான டி-உயிரணு அனைத்து வயதினருக்கும் உண்டாகும் அனைத்து வகையான புற்றுநோயையும் குணமாக்கும் வல்லமை பெற்றுள்ளது," என்று இந்த ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் ஆன்ட்ரூ செவல் கூறியுள்ளார்




உலக புற்றுநோய் தினம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு