மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. குறித்த பெண் நேற்று (29) மாலை கால்வாயில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் பிரதேசவாசிகள் முதலையிடம் இருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார். லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணத்தார்.
0 Comments
No Comments Here ..