22,May 2025 (Thu)
  
CH
BREAKINGNEWS

ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் : பொலிசார் தீவிர விசாரணை!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும் சைத்ராவும் தங்கள் மகனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் சைத்ரா நேற்று காலை குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர்களை எங்கும் காண முடியவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சைத்ரா மற்றும் குழந்தை பற்றிய தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அவர்களைப் பற்றிய விவரம் தெரிந்தால், தங்களுக்குத் தெரிவிக்கவும் என கேட்டுக்கொண்டனர். நேற்று இரவு, மங்களூரு கிராமிய பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தாயும், மகனும் இறந்து கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையுடன் நேத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கணவர் நாகராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் : பொலிசார் தீவிர விசாரணை!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு