காலி தங்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 34 வயதுடைய தங்கெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி, தங்கேதர டிடிஸ் வத்த பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..