04,Dec 2024 (Wed)
  
CH
BREAKINGNEWS

ஹக்மன படுகொலை - சிறிய தந்தை கைது!

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. ஹக்மன கஹடகஹகொரட்டுவ பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டார்.

 

முன்விரோதம் காரணமாக அவரது சிறிய தந்தை இந்த கொலையை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த, ஹக்மன கல்கந்த பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹக்மன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




ஹக்மன படுகொலை - சிறிய தந்தை கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு