04,May 2024 (Sat)
  
CH
அறிவித்தல்கள்

செல்போன் அதிகமாக சூடாவதை தடுக்கும் எளிய வழிகள்!

உங்கள் செல்போன் அதிகமாக சூடாகிறதா? மொபைல் பயனர்கள் பலரும் இந்த பிரச்சினை எதிர்கொள்கிறார்கள். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் போன் ஓவர் ஹீட் ஆவதைத் தவிர்க்கலாம்.

கோடை காலமாக இருப்பதால் சுற்றுச்சூழல் வெப்பமும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாகவும் மொபைல் போன் சூடாக வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் செல்போனை மிதமான வெப்பநிலை சூழலில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸ்கிரீன் ப்ரைட்னஸ் அதிகமாக இருப்பதும் ஸ்மார்ட்போனை சூடாக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஆட்டோ பிரைட்னஸ் ஆப்ஷனை பயன்படுத்தலாம். அல்லது பிரைட்னஸ் அளவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம்.

சூரிய ஒளி நேரடியாக மொபைல் போன் மீது விழும் விதமாக வைக்கக் கூடாது. சூரிய ஒளி நேராக விழுவதால் தொலைபேசி வேகமாக சூடாகிறது. இதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மொபைலை அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தாலும் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை அடிக்கடி வரும். அதற்கு ஒரே வழி போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பதுதான். சிறிது நேரம் போன் கவரை கழற்றி வைத்து போனை பயன்படுத்தாமல் இருக்கலாம். மொபைல் போன்களுக்கான கூலிங் ஃபேன் பயன்படுத்தலாம். லேப்டாப்களுக்கு இருப்பதைப் போல மொபைல் போன்களுக்கும் பிரத்யேகமான குளிர்விக்கும் ஃபேன்கள் கிடைக்கின்றன. எனவே வெப்பத்தைக் குறைக்கலாம்.


போனை ஓவர் சார்ஜ் செய்வதும் ஓவர் ஹீட் ஆவதற்குப் பிரச்சினைக்கு வழிவகுக்கும். பெட்டரி லெவல் 20% க்குக் கீழ் குறைந்தால் மட்டும் மொபைலை சார்ஜ் செய்யவும். 80% க்கு மேல் சார்ஜ் செய்யாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

சார்ஜ் போட்டுக்கொண்டே மொபைலில் பேசுவது, கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பவது, சமூக வலைத்தளங்களைப் பார்ப்பது போன்ற பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். சார்ஜ் ஆகும்போது யூஸ் பண்ணுவதும் மொபைல் ஹீட் ஆவதற்கு முக்கியக் காரணம். ஸ்மார்ட்போனுக்கு அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு தேவை. தினமும் ஒருமுறை மொபைலை சில நிமிடங்கள் ஆஃப் செய்து வைக்கலாம். குறைந்தபட்சம் ஒரு முறை மொபைலை ரீ-ஸ்டார்ட் செய்யலாம்.

மொபைலை சார்ஜ் செய்வதற்கு பிராண்டட் சார்ஜர் மற்றும் கேபிளை பயன்படுத்த வேண்டும். தரமற்ற வேறு சார்ஜர்களை பயன்படுத்தினாலும் செல்போன் சூடேறி கையைச் சுடும்.

பயன்படுத்தாமல் இருக்கும் அப்ளிகேஷன்களை ஸ்லீட் மோடுக்கு மாற்றலாம் அல்லது அழித்துவிடலாம். நமக்குத் தெரியாமல் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் மால்வேர் செயலி ஏதும் இருந்தாலும் மொபைல் சூடாவதைத் தவிர்க்க முடியாது. எனவே நம்பகமான ஆப் ஸ்டோரில் இருந்து, தேவையான அப்ளிகேஷன்களை மட்டும் டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.




செல்போன் அதிகமாக சூடாவதை தடுக்கும் எளிய வழிகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு