அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தமக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை முறியடித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மீது நடவடிக்கை எடுக்க உக்ரைன் அரசுக்கு அழுத்தம் கொடுத்த டிரம்ப்பின் செயல் செனட் சபை உறுப்பினர்கள் பலரையும் சங்கடத்தில் ஆழ்த்திய போதும் பதவி நீக்க கோரும் இரண்டு தீர்மானங்களின் இறுதி வாக்களிப்பில் 52-48, 53 -47 என்ற எண்ணிக்கையில் டிரம்ப் வென்றார். இதன் மூலம் பலமாதங்களாக டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை டிரம்ப் வென்றுள்ளார்.
செனட் சபையில் பிற்பகலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமை தாங்க, செனட் உறுப்பினர்கள் இரண்டு கேள்விகளுக்கு வாக்களித்தனர். முதல் கேள்வி டிரம்ப் குற்றவாளியா குற்றமற்றவரா என்பது .
இரண்டாவது காங்கிரஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. இரண்டிலும் டிரம்ப் வென்றார். டிரம்ப் விடுவிக்கப்பட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்த போதும் செனட் சபை உறுப்பினர்கள் டிரம்ப்புக்கு முழு ஆதரவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..