19,Jun 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி எம்மா ப்ரிகாம் மற்றும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.


இதன்போது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிறைச்சாலைகளக்கு அனுப்புவதை தவிர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


குறித்த கலந்துரையாடலின் போது இலங்கையில் மரண தண்டனை தொடர்பிலும் ஏனைய நீதித்துறை சார்ந்த விடயங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு