தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட்-ஆக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதீத மதிப்பை பெற்று இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. சில ஆண்டுகள் ரெட் கார்ட் போடப்பட்டு விலக்கி வைக்கப்பட்ட வடிவேலு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
வடிவேலு பற்றி புகழ்ந்து தள்ளுபவர்கள் மத்தியில் அவருடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்தவகையில் வடிவேலுவுடன் நடித்த நடிகை பிரியங்கா சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் வடிவேலு குறித்து என்னென்னமோ கூறுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்தவொரு அறிவும் இல்லை. என்னை பொறுத்தவரையில் வடிவேலுவுடன் நடிப்பது எனக்கு சுலபமாக தான் இருந்தது. ஒரேவொரு விஷயம் என்னவென்றால் அவருடன் நடிக்கும் போது அந்த காட்சியில் சிரிப்பை அடக்கிக்கொண்டு நடிக்க வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவாலாக எனக்கு இருக்கும் என்றும் பல காட்சிகளில் சிரித்துவிடுவேன், அதனால் அந்த காட்சியை எடுக்க பல டேக்குகள் எடுப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
0 Comments
No Comments Here ..