உலக அளவில் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் என்பன சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை பேஸ்புக் ஊடாக ஹேக்கர்களின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோல, பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன குறித்த தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான கணக்குகளை மீட்டெடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த அங்கீகரிக்கப்படாத தாக்குதலை அவர்-மைன்ட் என்ற பெயர் கொண்ட ஹேக்கர்கள் குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..