பேஸ்புக் வலைத்தளம் அறிமுகம் செய்துள்ள சட் செய்யும் அப்பிளிக்கேஷனான பேஸ்புக் மெசஞ்சரானது மிகவும் பிரபல்யம் ஆகும்.இந்த அப்பிளிக்கேஷனில் கணக்கினை உருவாக்குவதற்கு மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.எனினும் எதிர்காலத்தில் புதிதாக இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்கள் தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்தி கணக்கினை உருவாக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த முடிவானது புதிதாக பேஸ்புக் மெசஞ்சரில் இணையவிருப்பவர்களுக்கு பாதிப்பாக மாறியுள்ளது.எனினும் ஏற்கனவே பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப இணையத்தளமான VentureBeat இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..