ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் ஐந்து கனேடியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கப்பலில் உள்ள 251 கனேடியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
ஜப்பானிய சுகாதார அமைச்சகம் நடத்திய, சமீபத்திய சோதனைகளில் அடையாளம் காணப்பட்ட 41 கொரோனா வைரஸ் தொற்று பிரஜைகளில், கனேடியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளவர்களில், அர்ஜென்டினாவிலிருந்து ஒருவரும், அவுஸ்ரேலியாவிலிருந்து ஐவரும், ஜப்பானில் இருந்து 21 பேரும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒருவரும், அமெரிக்காவிலிருந்து எட்டு பேரும் அடங்குவதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.
கப்பலிலுள்ள கனடிய பிரஜைகளின் நலன் மற்றும் சிகிச்சை குறித்து கனேடிய அதிகாரிகள், ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானியத் துறைமுகமான யோகோகாமாவில் தரித்து நிற்கும் டயமன்ட் பிரின்செஸ் என்ற அந்தக் கப்பலில் 3,700 உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..