பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வருகை தந்த 30வயது மதிக்கதக்க இருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக மாகாண சுகாதார அதிகாரி டொக்ரர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்களைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன்மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால், கனடாவில் மட்டும் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவில் மூன்று பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் நான்கு பேரும் உள்ளடங்குகின்றனர்.
0 Comments
No Comments Here ..