04,Dec 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் நாளொன்றுக்கு 38 புற்றுநோயாளர்கள் மரணிப்பதாக தகவல்

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 38 புற்றுநோயாளர்கள் மரணமாகும் அதேநேரம் ஒவ்வொரு நாளும் புதிதாக 64 நோயாளிகள் இனங்காணப்படுகின்றனர்.

இந்த தகவல்களை தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகர் வைத்திய கலாநிதி சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் மாத்திரம் 23530 புற்றுநோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டனர்.

இதில் 14013 பேர் மரணமாகினர் என்று அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் கருத்தமர்வின்போது தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 56054 புற்றுநோயாளிகள் வாழ்கின்றனர். எந்தவகை புற்றுநோயிலும் மூன்று ஒரு பங்கை தடுக்க முடியும்.

எனினும் சில புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மாத்திரமே குணப்படுத்தமுடியும் என்று சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் 24 உள்ளன. அங்கு இலவசமாக சிகிச்சைகளும் சோதனைகளும் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.




இலங்கையில் நாளொன்றுக்கு 38 புற்றுநோயாளர்கள் மரணிப்பதாக தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு