கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எரிக் மேயர், வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராவார். தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் இவர் பொறுப்பாளராகச் செயற்படுகிறார்.
முன்னதாக, இவர் நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
0 Comments
No Comments Here ..