ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி பிரத்தியேக சந்திப்புக்களை நடத்தவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் இரு கட்சிகளினதும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுதப்படவுள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வழங்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இதுவரை இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவில்லை என பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டார்.
மேலும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்ைககள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்,
0 Comments
No Comments Here ..