அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதற்கைமைய, இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயில் பயணிகளுக்கான இலத்திரனியல் அட்டைடையப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஆசனங்களை பதிவு செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.
தற்போது காணப்படுகின்ற ரயில் டிக்கட்டுக்கள் மூலம், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த நிலையிலேயே, குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
0 Comments
No Comments Here ..